Mai 10, 2024

இந்தோனேசிய தேவாலயக் குண்டு வெடிப்பு! 14 பேர் காயம்!

இந்தோனேசியா மக்காசர் நகரில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.ஈஸ்டர் வாரத்தின் முதல் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குள் இரண்டு பேர் உள்ளே நுழைய முயன்றபோது அதிகாரிகள் அவர்களைத் தடுத்துள்ளனர். அதன் பின்னர் குண்டுகள் வெடிக்கப்பட்டிடுள்ளன.

சம்பவ இடத்தில் உருக்குலைந்த நிலையில் உந்துருளி மற்றும் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  மேலும் தாக்குதல் நடத்திய இருவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பானது உள்ளூர் நேரம் சுமார் 10:30 மணிக்கவெடிப்பு நிகழ்ந்தது.

தேவாலயத்தின் பிரதான வாயிலில் வெடிப்பு நடந்தபோது இரண்டு பேர் உந்துருளியில் தேவாலயக வாளாகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களை கதீட்ரலின் மைதானத்திற்குள் நுழைவதைத் தடுத்த தேவாலய அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தேவாலயங்களைத் தாக்கியுள்ளனர். ஆனால் இக் குண்டுவெடிப்பின் பின்னணியில் எந்தக் குழுவும் இதுரை உரிமை கோரவில்லை. இது தனிநபர்களின் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

மத விவகாரத்துறை அமைச்சர் யாகுத் சோலில் கூஒமாஸ் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு காவல்துறையினரை அவர் வலியுறுத்தினார்.

தாக்குதலுக்கான நோக்கம் என்னவாக இருந்தாலும் இந்த தாக்குதலை எந்த மதத்தினாலும் நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் இது மற்றவர்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறினார்.