April 27, 2024

கொத்து குண்டு சரி:கண்ணீர் புகை வேண்டாம்!

முள்ளிவாய்க்காலில் கொத்து குண்டு வீசப்பட்ட போது திருட்டு மௌனம் காத்த தரப்புக்கள் கொழும்பில் கண்ணீர் புகைக்குண்டுகளை தடை செய்ய கோரியுள்ளன.

இலங்கையில் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் கண்ணீர் புகை பிரயோகத்தை நிறுத்துமாறு இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளில் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனம் உள்ளதாக சபை தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த நாட்டில் பொலிஸாருக்கு கண்ணீர் புகை விற்பனை மேற்கத்திய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நாட்டில் நடக்கும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறைந்தபட்ச சக்தி என்று கூறி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வகையில் பொலிஸார் செயல்படுகின்றனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பல போராட்டக்காரர்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே இந்த நாட்டில் கண்ணீர் புகை பிரயோகத்தை தடை செய்யுமாறு சர்வதேச சமூகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert