Mai 6, 2024

தனக்கு எதுவுமே தெரியாதென்கிறார் கோத்தா!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை மற்றும் நீதி துறையே பொறுப்புக்கூறவேண்டுமென முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய குற்றஞ்சுமத்தியுள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளுக்கு காரசாரமான மறுப்புத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கர்தினால் ரஞ்சித் பயங்கரவாதத் தாக்குதல்களில் உண்மையில் ஈடுபட்ட இரு தரப்பினரின் பொறுப்பை மறைக்கிறார் அல்லது வெளிப்படையாக அவர்களை விடுவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கர்தினால் ரஞ்சித் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவற்றுக்கு பதிலளித்த கோத்தபாய  ராஜபக்ச, பொதுவாக முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வாக்களிக்கவில்லை அல்லது எனது வேட்புமனுவை ஆதரிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை, எனவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்ததால் தடை செய்யப்பட வேண்டிய எந்தவொரு அமைப்பிலும் எனக்கு கூட்டாளிகள் இருந்திருக்க முடியாது. 

எவ்வாறாயினும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது அரசியல்வாதிகளால் அல்ல, மாறாக காவல்துறை  சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்ற அமைப்பு என்பன அதற்காக ஒன்றிணைந்து செயற்படுகின்றன.

தற்கொலை குண்டுவெடிப்புகள் தொடர்பான குற்றங்களுக்காக 93 பேர்  தற்போது நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர்.ர்எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert