April 26, 2024

பிறக்கின்ற குழந்தைகளிலும் போசாக்கின்மை!

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் போசக்கின்மை கடும் பிரச்சினைகளை தோற்றுவித்துவருகின்றது.

கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்

வயதுக்கேற்ப குழந்தையின் எடை அதிகரிக்காவிட்டால், அந்தக் குழந்தை அறிவு வளர்ச்சி குன்றியதாக மாறுவது மட்டுமல்லாமல், உள் உறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாத நோயுற்ற குழந்தையாகவும் மாறும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையை உடனடியாகத் தடுக்க, குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும், இல்லையெனில் வருங்கால சந்ததியினர் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert