Mai 4, 2024

பிரான்ஸில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறை!

இன்று திங்கட்கிழமை இசைத்திருவிழா (Fête de la Musique) இடம்பெறுவதை அடுத்து, தலைநகரில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பரிசுக்குள் மாத்திரம் காவல்துறையினர், ஜொந்தாமினர் என மொத்தம் 2.300 அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளனர். இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும், முகக்கவசம் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, சில அனுமதிக்கப்படாத இசைக்குழுக்கள் மேற்கொள்ளும் இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, மதுச்சாலைகள், உணவகங்களில் சிறிய இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி உண்டு.
மேலும், இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும் இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு மேல் பார்வையாளர்கள் நிற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விதிகளை மீறுவோரை கண்காணிக்கவும், அமைதியை பேணவும் குறித்த அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.