Mai 5, 2024

சுவிஸ்லாந்தில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 37ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் இதுவரை 10ஆயிரத்து 859பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 354பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆயிரத்து 808பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 88பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக ஆறு இலட்சத்து 66ஆயிரத்து 384பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.