Mai 4, 2024

பிராசில் செயலிழந்தது அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள்!

பிரான்சில் அவசர அழைப்புக்கான  தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்ததால் மூன்று பேர் வரையில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.நேற்று புதன்கிழமை மாலை முதல் 15, 17, 18, மற்றும் 112 ஆகிய இலக்கங்களை அழைப்பதில் பொதுமக்களுக்கு தடை ஏற்பட்டது. ஆனாலும் இன்று வியாழக்கிழமை காலை முதல் அவசர இலங்கங்கள் வழமைக்கு திரும்பிய போதும் சில பகுதிகளில் அது வேலை செய்யவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவ சேவைகள், பொலிஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான பல அவசர அழைப்பு மையங்கள் செயலிழந்தாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேற்கு மோர்பிஹான் பிராந்தியத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் புதன்கிழமை இரவு குறைந்தது ஆறு மணி நேரம் நீடித்த செயலிழப்பின் போது அவசர அழைப்புக்கு வரத் தவறியதால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்தார்.

நீண்ட கால தாமதங்களால் இந்த மரணம் நேரடியாக நிகழ்ந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அவசர இலக்கத்துடன் மக்கள் பல முறை அழைக்க முயற்சித்ததாகவும், உடனடியாக ஒரு இணைப்பைப் பெற முடியாது என்றும் மக்கள் எங்களிடம் கூறியுள்ளனர் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரான்சின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஆரஞ்சின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீபன் ரிச்சர்ட் வியாழக்கிழமை அதிகாலை தனது அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு தொலைபேசி செயலிழப்பு குறித்து உரையாட்டியுள்ளார்.

தொழில்நுட்ப பிரச்சினையால் சில பிராந்தியங்களில் VoIP [வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்] அழைப்புகளை பெரிதும் பாதித்தது என ஆரோஞ்சு நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் நெட்வேர்க்கை எவரும் ஹக் செய்யவில்லை எனவும் அந்நிறுவனம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளது.

செயலிழந்த பகுதிகளுக்கான அவசர சேவை தொலைபேசி இலங்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை கீழ்வரும் விரிப்பில் பார்வையிடலாம்.