Mai 4, 2024

சிரியா ஆஸ்பத்திரியில் ஏவுகணை வீசியதில் 13 பேர் பலி!

சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகிறது.

அரசுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள், குர்தீஸ் படைகள், துருக்கி ஆதரவுப் படைகள் என பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் பல்வேறு பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இதில் ஹதே பகுதி துருக்கி ஆதரவு படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அப்ரின் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் 2 ஏவுகணைகள் வந்து விழுந்தன.

இதில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் 4 பேர் மற்றும் நோயாளிகள் என 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. குர்தீஸ் படையினர்தான் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அரசுபடைகள்தான் ஏவுகணைகளை வீசியதாக அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள துருக்கி ஆதரவு படையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.