Mai 3, 2024

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்துசண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள் படங்களிலும் கலைஇயக்குனராக பணிபுரிந்தவர் இவர். கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும் தொடர்ந்து மூன்று முறை தேர்வாகி பணிபுரிந்து வந்தார் புற்றுநோயின் பாதிப்பில் இருந்த அவர் இன்று (27.06.2021) காலமானார்.