Mai 3, 2024

Corona Virus | 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் தொற்று பரவியது: ஆய்வில் கண்டுப்பிடிப்பு

கொரோனா வைரஸ்

தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் என்பது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் என்பது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

அதன் மரபணுத் தாக்கமும் தெற்காசியப் பகுதிகளில் காணப்படுவதாக இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

கரெண்ட் பயாலஜி (Current Biology) என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே இப்போது சீனா, ஜப்பான், மங்கோலியா, வடகொரியா, தென் கொரியா மற்றும் தைவான் என்று அழைக்கப்படும் பகுதிகளில் கொரோனா வைரஸ் போன்ற ஒரு பெருந்தொற்று பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே பல கொரோனா பெருந்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. சார்ஸ், மெர்ஸ், எபோலா என்று வைரஸ்கள் பரவிய வண்ணமே உள்ளன. இதில் 2002-ல் சீனாவில் 800 பேரும் 2012-ல் சவுதி அரேபியாவில் 850 பேரும் பலியாகியுள்ள நிலையில் தற்போது உலகம் முழுதும் பரவிய பலவகை உருமாறிய கொரோனா தொற்றுக்களினால் 3.8 மில்லியன் பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம், அரிசோனா பல்கலை. கலிபோர்னியா பல்கலை, அடிலெய்ட் பல்கலை. ஆய்வுக்குழுவினர் இந்த 20,000 ஆண்டுக்கு முந்தைய கொரோனா பரவலின் மானிட மரபணுவின் சுவடுகளைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

“நவீன மானுட மரபணுவின் பரிணாமத் தகவலைச் சேகரித்தோமானால் 20,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்துள்ளது தெரிகிறது” என்றார்.

ஆய்வு கூறுவது என்ன?

இந்த ஆய்வாளர்கள் பொதுவான மனித மரபணு மாற்றங்களின் பொதுத் தொகுபான 1000 ஜெனோம்ஸ் புரோஜெக்ட் தரவுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இதில் சார்ஸ் கொரொனா வைரசுடன் ஊடாடும் புரோட்டீன்களின் மனித மரபணு மாற்ற்ங்களை ஆய்வு செய்தனர்.

பிறகு கம்ப்யூடேஷனல் ஆய்வு மாதிரியில் மனித மற்றும் சார்ஸ் கோவிட்-2 புரோட்டீன்களின் ஒத்திசைவை கண்டனர். மானுட செல்களில் கொரோனா வைரஸ் எப்படி ஊடுருவுகிறது என்பதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாற்றம் எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.

இந்நிலையில்தான் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவில் பரவிய கொரோனா போன்ற பெருந்தொற்று வைரஸுக்கு எதிராக மானுட மரபணு மாற்றங்களினால் மனித உடலின் எதிர்ப்புச் சக்திகளை வளர்த்துக் கொண்டுள்ளது.

பலதரப்பட்ட மக்கள் திரளின் வித்தியாசமான மரபணுக்கள் இத்தகைய வைரஸ்களுக்கு எதிராக தங்களை தகவமைத்துக் கொண்டது எப்படி என்பதற்கான ஆய்வில் இந்த ஆய்வு முன்னுதாரண ஆய்வாகும். அதே போல் கடந்த காலங்களில் பாதித்த இத்தகைய பெருந்தொற்று குறித்த ஆய்வை விரிவு படுத்தவும் உதவும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் அபாயகரமாகப் பரவக்கூடிய வைரஸ் பற்றிய பட்டியலை உருவாக்கி இதற்கான நோய்க்கணிப்பு முறைகள், வாக்சின்கள், மருந்துகளை கண்டுப்பிடிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.