Mai 6, 2024

மரணத்தில் சந்தேகம்!! விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது!!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த 4 ஆம் திகதி புதைகப்பட்ட விதுஷனின் சடலம் இன்று (21.06.2021) பகல் சுமார் 2 மணியாளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 3 ஆம்  திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் கைது செய்யப் பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டு இருந்தார் .

சந்திரன் விதுஷனின்  தங்கை  தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று தெரிவித்திருந்தார்.

எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு’இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

மருத்துவ உடல் கூற்று அறிக்கையில்  எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ்  போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர் உண்மை ஜெயிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில் 18 ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி அறையில் நீதிபதி  ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலி ஸ் காவலில் இருந்த பொழுது மரணமடைந்த சந்திரன் விதுஷன்   அவர்களுடைய மரணம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி  சுகாஷ் ஆஜராகி இருந்தார் .