Mai 3, 2024

வியாழேந்திரன் வீட்டின் முன்பு துப்பாக்கி சூட்டால் ஒருவர் பலி

எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.அதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை சிங்கள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் உள்ள வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.மணல் லொறியொன்றின் சாரதியே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறிய பொலிஸ் பேச்சாளர், சம்பவம் இடம்பெற்ற போது,மூன்று நாட்களுக்கு முன்னதாக டிப்பர் சாரதியுடன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலனாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.