April 28, 2024

சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய நிர்வாக முறைகேடுகளை ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் வெளிபடுத்தும் பேரணி.

சுவெற்றா அம்பாள் ஆலயத்தில் பலவருடகாலமாக தொடர்ந்துவரும் நிர்வாக முறைகேடுகளை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் மனவெளிப்பாடுகளை கோஷங்களா தாங்கி அமைதியான போராட்டத்தை பேரணியாக 06.06.21 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10. 15 மணியளவில் ஆலய வளாகத்தில் இருந்து ஆரம்பித்து நிர்வாகத்தின் இரகசியமான முறையில் தம்சார்ந்த உறவுக்காரர்கள், தமக்கு சாதகமான நண்பர்கள் அடங்கலாக 31 நபர்களுடன் நடைபெற்ற கூட்ட மண்டபம் வரை தொடரணியாக போராட்டத்தை நடாத்தினார்கள். இவ்போராட்ட பேரணிக்கு யேர்மனிய ஊடகத்தினர் மற்றும் தமிழ் ஊடகத்தினரும் பங்கெடுத்திருந்தனர். அவர்களின் கேள்விகளுக்கு பதில்கூற முடியாமல் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை காவலுக்கு நிறுத்தி,கதவை பூட்டி கூட்டம் நடைபெற்றது.
மக்களின் கோரிக்கைகள் என்ன?
————————————————————————————
1. யாப்பின் பிரகாரம் 3 வருடத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டிய பொதுக்கூட்டம் 2013 ம் ஆண்டு தொடக்கம் 2021 ம் ஆண்டுவரை பொதுமக்கள் அனைவரையும் அழைக்காமல் கூட்டமே கூடாமல் தொடர்ந்து உறவுக்காரர் நிர்வாகத்தில் இருப்பது.
2. ஆலயத்தில் பலஆயிரம் யூரோக்கள் களவாடப்பட்டும்.மீண்டும் அவ்நபரை நிர்வாகத்தில் வைத்திருப்பது .
3.150ற்கு மேற்பட்ட நபர்கள் அங்கத்தவர்களாக மாதாந்தம் அங்கத்துவ பணம் செலுத்தியும். வருடாந்த அங்கத்துவப்பணம் 25யூரோக்களை செலுத்தியும். நிர்வாக முறைகேடுகளை சுட்டிக்காட்டிய நபர்களை அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது.
4.புதிய ஆலயம் கட்டுவதாக மக்களை ஏமாற்றி பணம் வசூலித்து. மண்டப கட்டி ஆலயத்தை நான்கு சுவர்கள் மட்டும் அதுவும் நீளத்தினால் குறைத்து கட்டி மக்களை ஏமாற்றியமை.
5.கடந்த 27.09.20 மக்களின் கையொப்பமிட்டு மிக வற்புறுத்தலின் பின் கூட்டப்பட்ட கூட்டத்தில் பதவி விலகுவதாக கூறிய நிர்வாகத்தினர்.இன்று இரகசியமான முறையில் கூட்டம் கூடியமை.
6.புதிய ஆலய கட்டுமான நிதியாக வங்கியில் கடனாக பெற்ற 1900000 யூரோவிற்கு மேற்பட்ட யூரோக்களுக்கு தெளிவான கணக்கு விபரம் இதுவரை மக்களுக்கு காட்டாமல் தனிநபர் கையாள்வது.
7.பொருளாளர் பதவியில் செயல்படும் வயதுமுதிர்ந்த நபரை ஆலயவளாகத்திற்கு வர பொலீசாரை வரவழைத்து தடைசெய்தமை.
8.புதிய ஆலய கட்டுமான வரைபடத்தை மக்களுக்கு எந்த இடத்திலும் வெளிப்படையாக காட்டாமல் தனிநபர் வைத்திருப்பது.
9.இவ்விடயம் அனைத்தும் தெரிந்த ஆலயக்குருக்கள் தொடர்ந்து மௌனம்காத்து வருவது.
10.மக்களிடம் ஆலயம் கட்டுவதாக வாங்கிய பல இலட்சம் யூரோக்களுக்கு வரவு செலவு தெளிவான முறையிலோ அல்லது அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற மறுப்பது.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து செய்துவரும் நிர்வாகத்தின் மீது ஊடகங்களுக்கு முன்பாக தங்கள் கருத்துக்களை கேள்விகளாக கூறினார்கள். இவ்பேரணி நிகழ்வுகளுக்கு யேர்மனியில் பிறந்து வளர்ந்த இளம்சமூகமும், வியாபார ஸ்தாபன உபயங்கள் செய்யும் நபர்கள், பெண்கள், இளைஞர்கள், முன்னைநாள் நிர்வாகத்தினர், ஆலயத்தை ஆரம்பித்த நபர்கள், சுவெற்றா நகர மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். இறுதியில் பேரணிக்கான மகஜர் யேர்மனிய அரச சைவசமய மத அங்கீகாரம் வழங்கப்பட்ட ஸ்ரீ கம் காமாட்சி அம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ஆறுமுக பாஸ்கரக்குருக்களிடம் காமாட்சி அம்பாள் ஆலய வளாகத்தில் பேரணியின் பிரதிநிதிகளினால் வழங்கப்பட்டது.குறுகிய கால திட்டமிடல் பேரணி என்பதனாலும், கொரொனா கால சுகாதாரப்பிரிவின் சட்டவிதிமுறைகளுக்காகவும் இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் பொலீசாரின் தொடர் வாகன பாதுகாப்பு அனுமதியுடன் சிறப்பாக நடைபெற்றது பேரணி.
பத்திரிகை செய்திக்காக…
கி.த.கவிமாமணி …யேர்மனியிலிருந்து.