தயாரிப்பாளர் சங்க தேர்தல் விவகாரம்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக பொறுப்பில் தற்போது இருக்கும் நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த 2019 ல் ஏப்ரல் 30 ம் தேதியுடன் முடிவடைந்தது.
நடந்து போன சில பிரச்சனைகளால் தனி அதிகாரி ஒருவர் அரசால் நிர்வகிப்பட்டார். இதை எதிர்த்து சங்கத்தின் முன்னாள் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றம் தனி நிர்வாகியின் நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்தது.
இதனால் தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு விசாரித்த நீதிமன்றம் வரும் ஜூன் 30 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும், ஜூலை 30 ல் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் காலக்கெடுவை நீட்டிக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடர தற்போது நீதிமன்றம் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அக்டோபர் 30 ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.