September 16, 2024

அங்கயனிற்கும் வந்தது கதிரை?

அமைச்சு பதவியில் ஏமாற்றப்பட்ட யாழ்;.மாவட்ட சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிற்கு குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி வழங்கப்படவுள்ளது.

நாளை அமர்வில் அங்கஜன் இராமநாதனின் பெயர் பொதுஜனபெரமுன கூட்டினால் முன்மொழியப்பட்டுள்ளது.

இதனிடையே சபாநாயகர் பதவிக்கு தமது பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற குழு கூட்டத்திலேயே இவ்வாறு தமது பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் 10 ஆவது சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் ஆளும் தரப்பில் இருந்து ஒருவர் இந்த பதவிக்காக தெரிவுசெய்யப்படுவார்.

அதற்கு அமைவாக 10 ஆவது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன முன்மொழியப்பட்டுள்ளார்.பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலா பிட்டிய பெயரிடப்பட்டுள்ளார்.

முன்னைய நல்லாட்சி காலத்தில் அப்பதவியை செல்வம் அடைக்கலநாதன் பெற்றிருந்தார்.

முன்னதாக ஈபிடிபி சார்பில் முருகேசு சந்திரகுமார் அப்பதவியை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.