Oktober 6, 2024

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்கவுள்ள மைத்திரி!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்க உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சு பொறுப்புக்களை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை நாளைய தினம் கண்டியில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.