September 16, 2024

அடுத்து வருகின்றது-“கவாசாகி”

“கவாசாகி” நோயின் அறிகுறிகளுடன் ஒரு குழந்தை மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
“கவாசாகி” நோயின் அறிகுறிகளை உடைய பல சிறுவர்கள், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் , இதுவரை ஒரு குழந்தை மாத்திரமே அவ்வாறான நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் 10-15 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இந்த அறிகுறிகளுடன் வருகிறார்கள், அந்த அறிகுறிகள் கொவிட் 19க்கு இணையான அறிகுறிகள் எனினும் இதுவரை பரிசோதிக்கப்பட்ட எவருக்கும் இந்த தொற்று காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.