April 20, 2024

06 மில்லியன் பைசர் வீண்!

கொவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மூன்றாவது டோஸாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 60 இலட்சம் (06 மில்லியன்) டோஸ் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதி காலாவதியாகவுள்ள நிலையில் மக்கள் இனியும் தாமதிக்காது வந்து தடுப்பூசிகலை பெற்றுக்கொள்ளுமாறு , தொற்றுநோய்ப் பிரிவின் பணிப்பாளர் சமித்த கினிகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக அறுபது வயதுக்கு மேற்பட்ட தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த சில நாட்களில் அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு சென்று உரிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இந்நாட்டில் முப்பது வயதுக்கு மேற்பட்ட 140 இலட்சம் (14 மில்லியன்) பேர் இருப்பதாகவும், அந்த குழுவினர் முதல் மற்றும் இரண்டாவது கொவிட் எதிர்ப்பு மருந்துகளை பெற்றுள்ள அதேவேளை அவர்களில் எண்பது இலட்சம் (8 மில்லியன்) பேர் மட்டுமே மூன்றாவது டோஸ் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

எனவே, மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ளாதவர்களும், அறுபது வயதுக்கு மேற்பட்ட தீராத நோய்களால் அவதிப்படுபவர்களும் நான்காவது டோஸை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert