April 26, 2024

ஸ்ரீலங்கா படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு பிரான்சில் நினைவேந்தல்

இலங்கையில் பணியாற்றிய மாவட்டம் மூதூரில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 4 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று திருகோணமலையில் நினைவு கூரப்படாத நிலையில் பிரான்ஸில் இன்று நினைவு கூரப்பட்டுள்ளது.

திருகோணமலை மூதுார் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஸ்ரீலங்கா அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மூதுாரில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே அவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

ஊழியர்கள் அவர்கள் பணியாற்றிய அலுவலகத்தில் வைத்து முழங்காலிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டனர் என்றும், இவர்களைச் சுட்டவர்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினரே தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக ஏ.சி.எப். நிறுவனம் கூறிவருகிறது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் உள்நாட்டு யுத்ததின் போது தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளில் ஈடுபட்டது என்பதை சர்வதேச சமுகத்திற்கு காட்டிக்கொடுத்த முக்கிய சம்பவங்களாக அக்சன் பார்ம் படுகொலை மற்றும் திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை ஆகியன காணப்படுகின்றன.

எனினும் அந்த சம்பவங்களுக்கான நீதி மறுக்கப்பட்ட நிலையில் உயிர்களை பறிகொடுத்த உறவுகள் இன்றும் ஏக்கங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கடந்த காலங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.