Mai 2, 2024

சர்வதேச விமான பயணங்களுக்கான கட்டுப்பாடு: கனடா….

கனடாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பயணக் கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

கனடாவுக்கான சர்வதேச பயணங்களுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் வெள்ளிக்கிழமை தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட ஆவர், கனேடிய குடிமக்கள் மற்றும் கனடாவுக்குத் திரும்பும் நிரந்தர குடியிருப்பாளர்கள் தொடர்ந்து கடுமையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

கனடாவுக்கு வரும் பயணிகளிடம் இருமல், காய்ச்சல் இருக்கிறதா அல்லது சுவாசிக்க சிரமப்படுகிறதா என்று தற்போதும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மட்டுமின்றி கனடாவுக்குள் வருபவர்கள் அறிகுறிகள் இல்லாவிட்டால் 14 நாட்களுக்கு கண்காணிப்பில் இருத்தல் வேண்டும், அல்லது அறிகுறிகள் இருந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட பயணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டினர்கள் நாட்டிற்குள் செல்வதைத் தடுக்க கனடா நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.