6,000 கடந்தது பலி எண்ணிக்கை, 5,000 மேல் இன்றும் தொற்றுக்கள்!

தமிழகத்தில் புதிதாக 5709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கர்நாடகா, ஜார்க்கண்ட், ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 11 பேர் உட்படத் தமிழகம் முழுவதும் இன்று 5,709 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 லட்சத்து 49 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 37,12,654 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 5,850 பேர் உட்பட இதுவரை 2,89,787 பேர் நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 121 பேர் உட்பட இதுவரை 6,007 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 53,860ஆக உள்ளது. சென்னையில் மீண்டும் பாதிப்பு ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில், இன்று 1,182 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 1,19,059 பேருக்குச் சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.