September 29, 2023

தவராசா கலையரசன் இராஜினாமா?

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியக் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில் பிரதிநிதியாக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்பு சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிலையில் அவர் இன்று (16) இராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தமிழ் பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் கலையரசனுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.