September 30, 2023

கடனுடன் கைவிடப்பட்ட மணிவண்ணன்?

மில்லியன்களில் கடன்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வெளியே விடப்பட்டுள்ளார்.

அனைத்து தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்தும், ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக வி.மணிவண்ணனிற்கு கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது

இன்று(15) காலை கட்சியின் செயலாளரிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவித்தல் மின்னஞ்சல் வழியாக மணிவண்ணனிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரைகளிற்கென புலம்பெயர் உறவுகளது நிதி எதினையும் மணிவண்ணனிற்கு கிடைக்கவிடாது செயலாளர் கஜேந்திரன் தடுத்திருந்தார்.

இதனையடுத்து பலமில்லியன்களில் கடன்பட்டு தேர்தல் பரப்புரைகளை  மணிவண்ணன் மேற்கொண்டதாக ஆதரவாளர்கள் தெரவிக்கின்றனர்.