சுவிசில் நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்!

தாயகவிடுதலையைநெஞ்சினில் சுமந்து இறுதிவரைகளமாடிதமது இன்னுயிர்களைஉவந்தளித்தஎமதுமண்ணின் அழியாச்சுடர்களானமாவீரர்கள்

நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகளானாது 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களும் பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசகமைதானத்தில் மிகவும் சிறப்பாகவும்,எழுச்சியாகவும்நடைபெற்றது.சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின்விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்டஇப் போட்டிகளானதுபொதுச்சுடரேற்றலுடன்,சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்துஈகைச்சுடர்,அகவணக்கம்,மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது.

தமிழ்த் தேசியத்திற்குவலுச்சேர்க்கவும்இதாயகம் நோக்கியதேடலுடன் இளையோர்களைவழிப்படுத்தவும்,மாவீரர்களின் தியாகநினைவுகள் ஊடாகதாயகஉணர்வோடுஅவர்களைஒருமைப்படுத்தும்நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்டமாவீரர் நினைவுசுமந்த இவ் விளையாட்டுகளில் தற்போதையகொரோனாத் தொற்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் சுவிஸ் அரசின் சுகாதராவிதிமுறைகளைக் கடைப்பிடித்து நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும் இவிளையாட்டு  ஆர்வலர்களும்தாயகநினைவுகளைசுமந்தபடிஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

இரு தினங்களும் நடைபெற்றஆரம்பவணக்கநிகழ்வுகளில்; சுவிசின் பலகழகங்களில் இருந்தும் கலந்துகொண்ட இளம் தலைமுறையினர் மிகுந்தபற்றுடனும், ஆர்வத்தோடும் உரியநேரத்தில் பங்குபற்றி எமது மாவீரர்களுக்குவணக்கம் செலுத்தியமையானது அவர்களின் தேசியஉணர்வையும், பற்றையும் வெளிப்படுத்திநின்றது.

இளையதலைமுறையினரிடம்தமிழீழவிடுதலைப் போராட்டத்தடங்கள்,மாவீரர் தியாகங்கள்,அவர்களின் வீரவரலாறுகளைநினைவிற் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டஇப் போட்டிகளானது வளர்ந்தோர் உதைபந்தாட்டம், இளையோர் உதைபந்தாட்டம்,பெண்கள் உதைபந்தாட்டம்,கரப்பந்தாட்டம்,துடுப்பாட்டம் போன்றபிரிவுகளில்அனைத்துவிதமானபோட்டிகளும்;ஒருங்கேஆரம்பிக்கப்பட்டுசிறப்பாகஇரு தினங்களும்நடைபெற்றதுடன் 29வதுமாவீரர்கள் நினைவுசுமந்தவிளையாட்டுப் போட்டிகளில்வெற்றிபெற்றகழகங்களைச் சேர்ந்தவீரர்களுக்கானபதக்கங்களும்,கேடயங்களும்வழங்கப்பட்டதுடன், இதுவரைகாலமும் இவ் சுற்றுப்போட்டிகளைச் சிறப்பாகநடாத்தித் தந்தவர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்துகொடிகள்அனைத்தும் இறக்கப்பட்டுதாரகமந்திரத்துடன் போட்டிகள்; சிறப்பாகநிறைவடைந்தன.

இவ் விளையாட்டுப் போட்டிகள்சிறப்பாகநடைபெறஅனைத்துவகைகளிலும் முழு ஒத்துழைப்புநல்கியஅனைத்துக் கழகங்கள்,கழகவீரர்கள்,கழகப் பொறுப்பாளர்கள்,பயிற்சியாளர்கள்,ஆர்வலர்கள்,ஆதரவாளர்கள்,செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள்உள்ளிட்டஅனைத்துஎமதுஉறவுகளுக்கும் பாராட்டுதல்களையும்,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.