Mai 5, 2024

புதிய யாப்பை உருவாக்க நாம் தயார்

தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துடன் வடக்கு – கிழக்கு மக்களும் கைகோத்திருப்பதை தேர்தல் பெறுபேறுகள் காட்டுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆணையை பயன்படுத்திக்கொண்டு நாட்டுக்கு பொருத்தமான அரசியல் யாப்பொன்றை அங்கிகரித்துக்கொள்ளவேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றி தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுத் தேர்தல் முடிவுகள் இலங்கையின் பயணப்பாதையை புதியதொரு திருப்புமுனைக் இட்டுச்சென்றிருப்பதை காட்டுகின்றன. நாட்டை கட்டியெழும்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த இருவரும் மக்கள் முன் வைத்திருந்த திட்டங்களின் பிரகாரம் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு,

புதிய தேர்தல் முறைமை ஒன்றை மேற்கொண்டு நாட்டுக்கு பொருத்தமான அரசியல் யாப்பொன்றை அங்கிகரித்துக்கொள்ள, தற்போதுள்ள தேர்தல் முறைமையிலும் மக்கள் ஆணை ஒன்றை பெற்றுக்கொள்ள முடியுமாகி இருப்பது பாரிய வெற்றியாகும்.

தேர்தல் வெற்றியின் மூலம் பழைய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை மரணத்தறுவாயிக்கு தள்ளவிட்டுள்ளதுடன், புதிய வலதுசாரி கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னுக்கு வந்திருக்கின்றது. இவர்களுடன் அடிப்படைவாதிகள் மோசமான சக்திகளும் முன்னுக்கு வந்துகொண்டிருக்கின்றன. அவர்களுடன் அடிப்படைவாதிகள், மோசமான சக்திகள் அணிதிரண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றன.

அத்துடன் இந்த முறை தேர்தலில் மற்றுமொரு சாதகமான விடயம், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சிக்கும் பார்க்க, கூடிய வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2015 தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அவர்களின் வாக்கு சிறியதொரு வீதமே அதிகரித்திருக்கின்றது. அதுவும் ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சியுற்றதால், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் கிடைத்ததாகும்.

மேலும் இந்த தேர்தல் வெற்றி, மக்களின் வளங்களை பாதுகாப்பது உட்பட தேசிய பாதுகாப்பு, மக்கள் மயமான அபிவிருத்தி, மோசடி, பாதாள மற்றும் போதை பொருள் வியாபாரத்துக்கு எதிரான யுத்தத்துக்கான மக்களின் ஆதரவாகும்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திலும் முற்போக்கு தமிழ் மக்கள் சக்திகளும் தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துடன் கைகோத்திருப்பதை தேர்தல் பெறுபேறுகள் காட்டுகின்றன.

அதன்பிரகாரம் இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கள் பிரதேசங்களில் மேற்கொண்டிருந்த ஆட்சி வீழ்ச்சியுற்று, ஜனநாயக சக்திகளுக்கு சந்தர்ப்பங்கள் விரிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

உழைக்கும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் பொது மக்களுடன் ஒற்றுமையுடன் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்