சம்பந்தன் சம்பிரதாயத்திற்கு கூட எம்முடன் பேசவில்லை: பங்காளி கட்சிகள் எதிர்ப்பு; அதிர்ச்சி வைத்தியமளிக்க தயாராகின்றன!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனத்தில் பங்காளிக் கட்சிகளுடன் இரா.சம்பந்தன் சம்பிராயத்துக்கு கூட, கலந்துரையாடவில்லையென இரண்டு கட்சிகளும் கொதித்துப் போயுள்ளனர்.

ரெலோ, புளொட் அமைப்புக்களின் தலைமையுடன் இன்று தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இந்த நியமனத்தினால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தம்முடன் சம்பிரதாயத்திற்கு கூட இது குறித்து இரா.சம்பந்தன் கலந்துரையாடவில்லை, இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன. அத்துடன், இது தொடர்பில் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய இரண்டு கட்சிகளும் அவசரமாக கூடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக நெறிமுறைகளை மீறி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் அரசு கட்சியின் தலைமை பதவியை கைப்பற்ற எம்.ஏ.சுமந்திரன்- சிறிதரன் இணை தேசியப்பட்டியல் நியமனத்திற்கான இரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.