யாழ்ப்பாணமும் தயார்?

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5ம் திகதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு பணிகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடையும் என தொிவித்திருக்கும் மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர் க.மகேஸன்,

6ம் திகதி காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும், 11மணி க்கு பின்னர் தபால்மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும். எனவும் கூறியிருக்கின்றார். இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், 5ம் திகதி வாக்களிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்கெண்ணும் நிலையத்திற்கு வாக்கு பெட்டிகள் எடுத்து வரப்படும். இதன்போது கட்சிகள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் கண்காணிக்கலாம்.
மேலும் பிரதான வாக்கெண்ணும் நிலையமாக யாழ்.மத்திய கல்லுாரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்படும். அங்கும் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து முறைகேடுகள் இடம்பெறுகின்றனவா? என்பதை அவதானிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.
மேலும் தபால்மூல வாக்கெண்ணும் பணிகளில் முதலாவதாக ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கான தபால்மூல வாக்குகள் முதலில் எண்ணப்படும் என மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர் கூறியிருக்கின்றார்.