சிறீதரன் மீது சூடாம்:பதறும் ஆதரவாளர்கள்?

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சுவரொட்டிக்கு முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆட்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளாராம்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது நேற்று பிற்பகல் 7 மணியளவில்  கண்டாவளைப் பகுதியில்  முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் அவர்களுடைய ஆதரவாளர்கள் என கூறிய சிலரும் அப் பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை காரணமாக கொண்டு  சந்திரகுமாரின்  கண்டாவளை பிரதேச அமைப்பாளர் ரவி என்பவர் அப்பகுதி  சி.சிறீதரன் அவர்களுடைய  அமைப்பாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இப் பகுதி எங்களூடையது எவ்வாறு நீங்கள் பிரச்சாரம் செய்யமுடியும்.
ஆகவே என்னிடம் உள்ள துப்பாக்கியைக் கொண்டு  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் அவர்களுடைய விளம்பரப் பதாதைகளை சுட்டுத் தள்ளப் போகின்றேன்  வந்து பாருங்கள் என தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததுடன் அதன் பின்னர் விளம்பர பதாதை மீது சட்டவிரோத துப்பாக்கி (சொட்கண் துப்பாக்கி)  கொண்டு துப்பாக்கி பிரயோகம்  பிரயோகம் செய்துள்ளாராம்.
எனினும் சாதாரண சுவரொட்டியில் காணப்பட்ட துவாரங்கள் தொடர்பில் சிறீதரன் தரப்பு மலின பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.