September 29, 2023

போர் வெற்றி விழாவில் டக்ளஸ்!

இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்த இன்றைய போர் வெற்றி விழா நிகழ்வுகளில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை கொடூரமான போரில் அநியாயமாக கொல்லப்பட்ட சொந்த இன பொதுமக்களை நினைவு கூற அனுமதி மறுக்கும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ வெற்றி விழா நிகழ்வில் தமிழ் மக்கள் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா பங்கெடுத்திருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.