September 11, 2024

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள் சுடர் ஊடரங்கு கட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஏற்றப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழ் இனப்படுகொலைகள் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று குறித்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இருப்பினும் இன்று நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் நடமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனின் வீட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள் நினைவு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.