April 19, 2024

சமூக தொற்று இல்லை:கொரொனா உண்டு

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா பரவல் காணப்படவில்லை. என்பதற்காக நாட்டில் கொரோனா தொற்றாளர்களே இல்லை என அர்த்தம்
கொள்ள முடியாது. எங்காவது ஒருவரேனும் எமது பரிசோதனைகளில் இருந்து தப்பி நோய் அறிகுறிகள் காட்டப்படாமல் இருக்கலாம்.
மேற்கண்டவாறு கூறியிருக்கும் தொற்று நோய் தடுப்பு பிரிவின் மருத்துவர் சுதத் சமரவீர, இலங்கைக்கு கொரோனாவால் பாரிய ஆபத்துக்கள் உண்டாகாதபோதும் பாதிப்பு மீண்டும் மீண்டும் நோய் பரவும் ஆபத்துள்ளது. சமூக மட்டத்தில் தொற்று அடையாளம் காணப்படவில்லை
என்பதற்காக நாட்டில் கொரோனா தொற்றாளர்களே இல்லை என கூற முடியாது. எங்காவது ஒருவரேனும் எமது பரிசோதனைகளில் இருந்து தப்பி நோய் அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம். அதற்காகவே அரசாங்கம் மற்றும் சுகாதாரதுறையினர் சமூக இடைவெளியை பேணவேண்டும் என கேட்கிறார்கள்.
மேலும் தற்போது கடற்படையினரும், அவர்களுடன் பழகியவர்களுமே தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். ஆகவே விமான நிலையங்கள் திறக்கப்படும்போதே ஆபத்து தொடர்பாக உணர்ந்து கொள்ளகூடியதாக இருக்கும். தற்போது கொரோனா இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக கொள்ளலாம் என்றார்.