ஐரோப்பிய நாடுகளுக்கான எல்லைகளை ஜூன் 15ல் மீண்டும் திறக்க ஜெர்மன் முடிவு!

ஐரோப்பாவின் 26-மாநில ஷெங்கன் விசா இல்லாத நாடுகளுக்கு இடையில் ஜூன் 15 முதல் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அவசர எல்லைக் கட்டுப்பாடுகளையும் அகற்ற விரும்புவதாக ஜெர்மனியின் சென்ச்செலர் அங்கேலா மேர்க்கெல் கூறினார்.

 „கொரோனா நம் அனைவருக்கும் ஒரு ஆபத்தாகவே உள்ளது“ என்று கூறிய மேர்க்கெல், ஜேர்மனியர்கள் இன்னும் சில காலம் தொற்றுநோயுடன் வாழ்வார்கள், ஏனெனில் இன்னும் பயனுள்ள சிகிச்சை அல்லது தடுப்பூசி கண்டறியப்படவில்லை , அதற்காக எங்கள் எதிர்கால திட்டங்களை தள்ளி போடா முடியாது, அதற்காக எங்களை சில கட்டுப்பட்டு நடைமுறைகளுக்கு பழக்கப்படுத்தி முன்னேறிச் செல்வோம் என்று குரிப்பிட்ட்டுள்ளார்.