September 10, 2024

உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் மிக விரைவாக கரைக்கும் ஓர் அற்புத பொருள்!

இன்று உடல் பருமனால் ஏராளமானோர் கஷ்டப்படுகிறார்கள். இதனால் உடல் எடை மற்றும் கொழுப்பைக் கரைப்பதற்கு பல்வேறு உணவுத் திட்டங்களை முயற்சித்து வருகிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க பல டயட்டுகள் உள்ளன. இருப்பினும் அனைத்து வகையான டயட்டுகளுமே உடல் எடையைக் கட்டாயம் குறைக்கும் என்று கூற முடியாது.

அடிவயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்புக்கள் தான் மிகவும் ஆபத்தானது. இத்தகைய கொழுப்புக்களைத் தான் உள்ளுறுப்பு கொழுப்பு என்று அழைப்பர். அவற்றை தடுக்கும் ஓர் அற்புத பொருள் தான் கொடிமுந்திரி.

உள்ளுறுப்பு கொழுப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. ஆகவே அடிவயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்க முயற்சிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.கொடிமுந்திரியை எப்படி உட்கொண்டால் அடிவயிற்றில் உள்ள உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க முடியும் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
கொடிமுந்திரி – 100 கிராம்
தண்ணீர் – 1 லிட்டர்

தயாரிக்கும் முறை
கொடிமுந்திரியில் நீரை ஊற்றி மூடி ஒரு வாரம் ஃப்ரிட்ஜில் வைத்திருக்க வேண்டும்.பின் அதனை வெளியே எடுத்து பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதை காலை உணவிற்கு முன்னர் ஒரு கப் சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து உட்கொண்டு வந்தால், 3-4 நாட்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.இது வயிற்றுக் கொழுப்பைக் கரைக்கும் ஓர் அற்புதமான வழியாக கருதப்படுகிறது.