முல்லை விமான படை தளத்தில் இருவர் பலி; கொரோனா?

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு விமானப் படை தள தனிமை மையத்தில் இன்று (01) காலை ஒருவரும், மாலை ஒருவருமாக வயோதிபர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.
வேலு சின்னத்தம்பி (80-வயது) என்ற கொழும்பில் வீடற்று இருந்த நிலையில் அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் ஒருவர் இன்று காலை நெஞ்சு வலி என தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமடைந்துள்ளார். அதேபோல் அவரது வயதையொத்த குணசிங்கபுரவை சேர்ந்த ஒருவர் இன்று மாலை மரணமடைந்துள்ளார்.
இவர்களுக்கு கொரோனாவா என பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முடிவு நாளை வெளியாகும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது