Mai 3, 2024

மளிகை கடைக்கு சென்று திரும்பிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

கனடாவில் சுரண்டல் லொட்டரி டிக்கெட் வாங்கிய இளம்பெண்ணுக்கு பெரியளவில் பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டீஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் நகரை சேர்ந்தவர் Yan-li Wu.

இளம்பெண்ணான இவர் Aberdeen Centre-ல் சுரண்டல் லொட்டரி சீட்டு வாங்கினார்.

அதில் அவருக்கு $50,000 பரிசு விழுந்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள Yan-li Wu கூறுகையில், மளிகை கடையில் பொருட்கள் வாங்கிய பின்னர் நான் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்ததா என பார்த்தேன்.

ஆம், என்னால் நம்பவே முடியவில்லை, எனக்கு $50,000 பரிசு விழுந்திருந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சியை நான் அங்கேயே கத்தி பெரிதாக்க விரும்பவில்லை. வீட்டுக்கு வந்த பின்னரே அதை குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டேன்.

எனக்கு லொட்டரியில் பரிசு விழுந்தது சொல்ல முடியாத அளவில் சந்தோஷத்தை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.