ஒரே நாளில் 12 பலி, 827 தொற்றுக்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரப் பாதிப்பு நிலவரத்தைச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் உட்பட மொத்தம் 827 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 19,327ஆக அதிகரித்துள்ளது. இன்று 639 பேர் உட்பட மொத்தம் 10,548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக இன்று 12 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இதுவரையிலான உயிரிழப்பு 145 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவபர்களின் எண்ணிக்கை 8,676ஆக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, மொத்தம் 12,762 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள் உட்பட 39 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது.