März 27, 2023

வல்லிபுரத்தில் வெடிப்பு:பொலிஸ் காயம்?

வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

சட்டவிரோத மண் அகழ்வோரை கண்காணிக்க பொலிஸார் தங்கியிருக்கின்ற சுற்றுவளைவு ஒன்றினை மையப்படுத்தி உள்ளுர் பொருட்களால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றே வெடித்துள்ளது.
பொலிசாரை இலக்கு வைத்து மண்ணில் புதைத்த வெடிபொருளே வெடித்துள்ளது.
இதனிடையே சில தரப்புக்கள் கிளைமோர் குண்டு வெடிப்பென பொய் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதாகவும் இது தொடர்;பில்; பொலிஸ் , இராணுவம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.