Juli 27, 2024

3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஜெனரல் பெலிப்பெ ஏஞ்செல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான இடத்திற்கு அருகில் 60 மம்மத்
(இராட்சத யானைகள்) மற்றும் 15 மனித அடக்கங்களின் எச்சங்களை மெக்சிகன் தொல்பொருள் துறை கண்டுபிடித்தது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்குகள் மற்றும் மனிதர்களின் எச்சங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ஹிஸ்பானிக் காலத்திற்கு (Hispanic times) அதாவது ஸ்பானிய காலனியாதிக்கத்துக்கு முற்பட்ட நாகரீகத்தைச் சேர்ந்தது எனக் கூறப்பட்டுள்ளது.