September 16, 2024

வந்து சேர்ந்தது முல்லைதீவிற்கு கொரோனா?

எந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை சேர்ந்த இரண்டு பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முல்லைத்தீவுக்கு மூழ்கியிருக்க கடந்த திங்கட்கிழமையும் 15 பேரூந்து வண்டிகளில் கொரோனா தொற்றுக்கான வாய்ப்புள்ள கடற்படையினர் மற்றும் கடற்படையினரின் குடும்பத்தினர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதனிடையே அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கேப்பாபிலவு – பிலக்குடியிருப்பு, வீதிக்கரையோரமாக 2017ல் விமானப்படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய சிறிய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கம்பிவேலியால் அடைப்பிடப்பட்ட குறிப்பிட்ட கட்டடத்தில் சுமார் 40 வரையானோர், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முற்றாக தமிழ் மக்கள் நடமாட்டம் மிக்க பயன்பாட்டிலுள்ள வீதியை நெருக்கமாக திறந்த கட்டடமொன்றில் தங்கவைத்திருப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்கள், இராணுவ முகாம்களுக்குள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன என்று அரசு மக்களுக்கு சொல்லியுள்ள நிலையில், இராணுவத்தினரால் மக்களிடம் கையளிக்கப்பட்ட விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் தேவையுள்ளவர்களை தங்கவைப்பது எங்ஙனம என கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கு கூட படைத்தரப்பை சேர்ந்தவர்கள் என்ற தரவுகள் நிற்க, வலிந்த சீருடைமயமாக்கல் திட்டத்துக்குள் தமிழர் தாயகம் செல்கின்றதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் அவ்வாறு தங்கவைக்கப்பட்டவர்களிடையே கொரொனா கண்டறியப்பட்டு;ள்ளதால் முல்லைதீவு அபாய பிரதேசமாகியுள்ளது.