September 10, 2024

கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி… காதல் கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்!

கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி... காதல் கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்!

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமானவர் மைனா நந்தினி. அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மைனா நந்தினி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதற்காக புதிய உடைகளையும் அவரது கணவர் யோகேஸ்வரன் வாங்கிக் கொடுத்துள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதையடுத்து, அவர் அளித்த பேட்டியில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், 3 மாதம் வரை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது 5 மாதம் ஆகிவிட்டதாகவும், வயிறு பெரிதாக பெரிதாக லூசான ஆடைகளை தான் அணிய வேண்டியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், எங்களுக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. மொத்தத்தில் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று மைனா நந்தினி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.