September 9, 2024

ஆமி கோத்தாவிற்கு காசு கொடுக்க வேண்டாமாம்?

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போதுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு நாள் சம்பளத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்குவது தொடர்பான வேண்டுகோள் , பாதுகாப்பு படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு சேவைகள் பணியாளர்களுக்கு பொருந்தாது என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி. பி. ஜெயசுந்தரா அரசு ஊழியர்களிடம் அவர்களின் மே மாதத்தின் சம்பளத்தின் முழுமையையோ அல்லது ஒரு பகுதியையோ விதவைகள் மற்றும் அனாதைகளின் ஓய்வூதிய நிதிக்கு நன்கொடையாக கோரியதற்கு அவர் பதிலளிக்கும் பொழுதே இதனை தெரிவித்தார்
இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, அமைச்சின் எல்லைக்குட்பட்ட அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு குறிப்பிட்ட தொகையை அரை சம்பளம், வார சம்பளம் அல்லது மே மாத சம்பளத்துடன் தங்கள் ஊழியர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு வழங்குமாறு கோரி ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு கருது தெரிவித்துள்ளா