September 11, 2024
எதுவுமே
அறியாத எங்களை
அடைத்து
வைத்தே வதைக்கின்றாய்.
திறந்த வெளி
சிறைச்சாலைகளாக்கி
சித்திரை வதை
செய்து மகிழ்கின்றாய்.
அக்கா தங்கையரை
பிடித்து இழுத்து
செல்கின்றாய் பாலியல்
கொடுமைகளை கண்
முன்னே நிகழ்த்தி காட்டுகின்றாய்.
இராணுவம்
காவலர்களா
காமுகர்களா என்பதை
காட்சிகளால் காண்பிக்கின்றாய்..
காலம் எங்கள்
கைகளுக்கு மாறும்
மாற்றங்கள் தானே
ஏற்றங்களை தரும்.
குருஷேத்திர போர் நீளும்.
விழிகள் பார்த்தவை
மனப்பதிவில்
ஆவணங்களாகின
ஆட்டம் அடங்க ஒரு நாள்
உரிமைப் போர் வெடிக்கும்.
அறுவடைகள் நாங்கள்
ஆவன செய்வோம் பொறுத்திரு.
ஆக்கம் கவிஞர் தயாநிதி