ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு மனைவி: விசித்திர கிராமம்!

ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு மனைவி: விசித்திர கிராமம்! எங்கு தெரியுமா ??

இந்தியாவின் சிறிய கிராமமொன்றில் அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவி ஒரு கிராமத்தின் வினோத பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைத்துள்ளது. இந்த பகுதியில் தேரசர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் அந்த பகுதியில்தான் வசித்து வருகின்றனர். அவர்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அதை அந்த கிராம மக்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர்.

அந்த கிராமத்தில் உள்ள திருமணமான அத்தனை ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள் இருக்கிறார்களாம். இது ஒன்று அவர்கள் பின்பற்றும் மத சடங்கு இல்லை. இந்த பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரம். இது மதங்களை கடந்து அனைவரிடமும் இருக்கிறது. அப்பகுதியில் 70 முஸ்லீம் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும் இதே பழக்கத்தை தான் பின் பற்றுகின்றனர்.

அந்த ஊரில் வாழும் ஆண்கள் திருமணம் செய்ய விரும்பினால் முதல் மனைவியை திருமணம் செய்த பிறகு கட்டாயம் இரண்டாவது மனைவியையும் திருமணம் செய்ய வேண்டுமாம். ஏன் என்றால் முதல் மனைவிக்கு குழந்தையே பிறக்காது என கூறப்படுகிறது.

அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் யாரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவர் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர். பலர் தனது முதல் மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தும் முடியவில்லை என கூறப்படுகிறது.

கிராமத்தில் நிறைய பேர் தங்கள் முதல் மனைவியுடன் ஒரு குழந்தையைப் பெறுவதற்காக தங்கள் வாழ்க்கையின் கிட்டத்தட்ட பாதி வரை காத்திருக்கிறார்கள். அத்தகைய ஆண்கள், மீண்டும் திருமணம் செய்துகொண்டபோது, குழந்தைகளைப் பெறுகிறார்கள். ஒருவர் இரண்டு முறை திருமணம் செய்து கொள்ள ஒரே காரணம் இதுதான். இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், முதல் மனைவி தனது கணவரின் இரண்டாவது மனைவியுடன் பொறாமை அல்லது பாதுகாப்பற்ற தன்மையை உணருவது இல்லை.

ஒருவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்தபின் மூன்று குழந்தைகளைப் பெற்றார்.

கிராமத்து பெண்கள் குடிநீரை சேகரிக்க ஒவ்வொரு நாளும் 5 கிலோமீட்டருக்கு மேல் மலையேற வேண்டும். கர்ப்பமாகிவிட்ட பிறகு ஒரு பெண் தண்ணீர் எடுக்க இவ்வளவு தூரம் நடக்க முடியாது. எனவே, அவரது கணவர் வேறொரு பெண்ணை மணக்கிறார், இதனால் வீட்டு வேலைகளை நடத்தி தண்ணீர் கொண்டு வரலாம். இது கிராமங்களில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.