September 9, 2024

716 புதிய தொற்றுக்கள், 8 இறப்புக்களுடன் தமிழகம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 716 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 510 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 716 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 8718-ஆக அதிகரித்துள்ளது. இன்று பதிவான வழக்குகளிலும் பெரும்பாலான வழக்குகள் சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையது என சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.

சென்னையை பொருத்தவரையில் கொரோனா பதிவுகளின் எண்ணிக்கை 4882-ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து., திருவள்ளூரில் 467, கடலூரில் 396 வழக்குகளும் பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு 391, அரியலூர் 344, விழுப்புரம் 299 தொற்றுகளையும் பதிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு 83 பேர் இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 2134 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மற்றும் இன்று 8 இறப்புகள் என தமிழகத்தில் மொத்தம் 61 கொரோனா இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளது.