ஒரே நபரால் 533 பேருக்கு தோன்றிய கொரோனா!

கானா நாட்டின் Tema நகரில் உள்ள மீன் பதனீட்டு ஆலை ஒன்றில் கொரோனா COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஓர்
ஊழியரிடமிருந்து 533 ஊழியர்களுக்குக் கிருமி பரவியிருக்கிறது என அந்நாட்டு அதிபர் Nana Akufo-Addo தெரிவித்துள்ளார்.
ஆலையில் ஏற்பட்ட கிருமிப் பரவல் குறித்து சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டறிந்துள்ளனர்.
புதிய தொற்று சம்பவங்களைத் தொடர்ந்து கானாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்றிரவு நிலவரப்படி 4ஆயிரத்து 700ஆனது.
அத்தோடு கிருமித்தொற்றால் 22 பேர் பலியாகியுள்ளதோடு, 494 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.