Oktober 8, 2024

ஈழத் தமிழரை மணந்த ரம்பா மீண்டும் நடிக்க வருகின்றாரா?

ஈழத் தமிழரை மணந்த ரம்பா மீண்டும் நடிக்க வருகின்றாரா?

நடிகை ரம்பா 10 வருட குடும்ப வாழ்க்கை குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியதாவது,

‘எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும் பயங்கரமாக சண்டை போடுவேன்.

கொஞ்ச நேரம் கழித்து, ஒரு காபி போட்டு வந்து வைப்பார். அதற்கு பிறகு எனது கோபம் எல்லாம் பலூன் போல காற்று இறங்கி போய்விடும்.

எனக்கு கடவுள் அருமையான குழந்தைகளை கொடுத்துள்ளார். அவர்களோட நான் சந்தோஷமாக இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

அது மாத்திரம் இன்றி, மேலும் மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இப்போது நான் ஒரு தாய்.

பழையபடி டூயட் எல்லாம் பாட முடியாது. எனக்கேற்றவாறு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்பா. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் படங்களிலும் இவர் நடித்து கலக்கினார்.

இதுமட்டுமின்றி சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்த இவர், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.