Oktober 7, 2024

ஆயுதப்போராட்டம் அதர்மமா? சுமந்திரன் கருத்துக் குறித்து கஜேந்திரகுமார்

விடுதலைப் போராட்டத்தை ஒருபோதும் நான் ஏற்றுக்கொண்டதில்லை எனவும், சிறீலங்காவின் சிங்கக் கொடியையும், சிறீலங்கா தேசிய கீதத்தை
முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார்.

இதுகுறித்து தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையில்:-

நாங்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய காலம் முதல் நாங்கள் ஒன்றை வலியுறுத்தி வருகிறோம். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் கொள்கையைக் கைவிட்டு தனியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலிருந்து அவர்கள் விட்டுச் செல்கிறார்கள் என்ற கருத்தை 11 வருடங்களாக கூறிவருகிறோம். அதற்கு பல ஆதாரங்களையும் நாங்கள் சுட்டிக் காட்டி வந்திருக்கின்றோம்.

2010 ஆண்டு பேராரியர் சிவநாதன் தலைமையில் ஏற்பாடு செய்த ஒரு விவாதத்தில் சுமந்திரன் விடுதலைப் போராட்டம் ஒரு அதர்மம் என்றும் தர்மமே எப்போதும் வெல்லும் என்று இந்த ஆயுதப் போராட்டத்தை அதர்மாம் என்று கூறி தனது ஆழமான கருத்தை வலியுறுத்தினார்.

கஜேந்திரகுமார் கூறிய விடயங்களை காணொளியில் பார்வையிடலாம்.