September 9, 2024

ஊரடங்கில் கைவரிசை! யாழில் ஐவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊடரங்கு அமுலில் இருந்த நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கோப்பாய்க்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

கரந்தன் வீதி ஊரெழுபகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில்  தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த பணம் நகை  சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் இர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கோடரி, வாள், திருடப்பட்ட ஈருறுளிகள், நகைகள், நகைகள் அடகு வைத்த சிட்டகள், நகைகள் விற்ற சிட்டைகள், 485,000 ரூபா,  2.5 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடைய இளவாலை, மல்லாகம் ,உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.