September 10, 2024

இலங்கையில் தமிழ் பெண்களை துரத்தி துரத்தி போன் நம்பரை பறிக்கும் விசமிகள்

எங்கே ஆடு நனையும், என்று காத்திருக்குமாம் ஓணான் கூட்டம் இது. அது போல கொழும்பிலும் அதனை அண்டிய பிற மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில்.

இன் நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சிலர் வெளியே செல்ல வேண்டி வருகிறது.

இதனை சற்றும் உணராத பொலிசார், அவர்களை பெரும் குற்றம் இழைத்தவர்களாக பார்பது மட்டுமல்லாது.

நிலமையை தமக்கு சாதகமாக்கவும் தயங்குவது இல்லை என்ற செய்தி அதிர்வு இணையத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இவ்வாறு கொழும்பு கல்கிசை பிரதேசத்தில் வெளியே சென்ற தமிழ் பெண்ணை மிரட்டிய பொலிசார். குறித்த பெண்ணின் மோபைல் நம்பரை கேட்டுள்ளார்கள். அவர் அதனை தர மறுத்தவேளை.

வலுக் கட்டாயமாக அவரது மோபைல் போனில் இருந்து, மிஸ்டு கால் ஒன்றை கொடுத்து. நம்பரை அறிந்து கொண்டுள்ளார்கள்.

இந்த விடையம் இத்தோடு நின்றுவிடும் என்று பார்த்தால். இரவில் அழைப்பை விடுப்பதும். வாட்ஸ் அப் மூலமாக செய்திகள் அனுப்புவது என்று அந்த தமிழ் பெண்ணை, வாட்டி வதைக்கிறார்கள் பொலிசார்.

பொலிசாரே இப்படி செய்தால், எந்த பொலிஸ் நிலையத்தில் சென்று முறையிடுவது என்று அந்த பெண் மெளனமாகவே இருந்து வருகிறார். .

பெற்றோர் யாழில் இருக்க வேலை நிமிர்த்தம் கொழும்பில் தங்கியுள்ள குறித்த தமிழ் பெண், என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளதாக அதிர்வின் புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஒரு புறம் இலங்கையை முடக்கிப் போட. அதிலும் சூடு காய நினைக்கிறது இந்த சிங்கள பொலிஸ் என்று நினைக்கும் போது தான், பெரும் கவலையாக உள்ளது என்கிறார் நிருபர்.