September 9, 2024

சிறுவனை பலியெடுத்த வீதி விபத்து!

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.

நொச்சிமுனை தரிசனம் வீதியைச் சேர்ந்த றொபட் டினேஷ் ஹனபன் ஹொசேயா (6-வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

புல்லுமலை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ சபை போதகர் ஒருவர், தனது மனைவி, 2 வயது பெண் பிள்ளை, உயிரிழந்த சிறுவன் ஆகியோர் 4 பேரும் சம்பவ தினமான நேற்று காலை குறித்த சபைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பகல் 1.30 மணியளவில் வீடு நோக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இதன்போது சின்ன புல்லுமலை பிரதேசத்தில் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டதால் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில் சிறுவன் உயிரிழக்க, ஏனைய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

சம்பவத்தை அடுத்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.